திருச்சி ஜங்சன் சாலையில் தனியார் பள்ளி எதிரே உள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ள சாலையின் ஓரத்தை ஆக்கிரமிப்பு செய்து ஆட்டோ ஓட்டுநர்கள் இடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களுக்கு தேவையான இடத்தை தேர்வு செய்து தடுப்புகள் வைத்துள்ளனர்.
இதனால் மற்ற வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமன்றி அந்த தடுப்புகளுக்கு அருகில் மற்ற வாகனங்கள் நிறுத்துவதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சாலையின் ஓரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்க முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? அவ்வாறு இருப்பின் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தியது ஏன்?
இந்த ஆட்டோ ஸ்டாண்ட்க்கு எதிர்ப்புறம் உள்ள டீக்கடையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் தற்போது இந்த ஆட்டோ ஸ்டாண்டால் சாலை ஆக்கிரமிப்பால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது உடனடியாக போக்குவரத்து காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments