திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வடக்கு ஆண்டார் வீதி உள்ளது. இந்த பகுதிக்கு அருகாமிலேயே இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, சாவித்திரி வித்யாலயா பள்ளி மற்றும் மகளிர் கல்லூரி உள்ளது. மேலும் அதிகப்படியாக மகளிர் விடுதிகள் இந்த பகுதியில் இருப்பதன் காரணமாக இளைஞர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பைக் ரேசிங்கில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பைக்கில் வேகமாக செல்வது அதிகப்படியான ஒலி எழுப்பிக்கொண்டே சென்று மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் செயலில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபர் மீது ரேஸ் பைக்கில் வந்த நபர்கள் அவரை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வந்து அவரை இடித்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி அங்கேயே கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதான சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தற்போது குடியிருப்பு பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். இதனால் மற்ற வாகன போட்டிகள் செல்லவும் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்லவும் அச்சப்படுகின்றனர். இது மட்டுமின்றி தினமும் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெறுகிறது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பைக் ரேஸ் இளைஞர்களால் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர் பிரபல ஸ்வீட் கடை உரிமையாளரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments