சார்ஜா, துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று கோவை மற்றும் மதுரையிலிருந்து வந்த அதிகாரிகள் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மூன்று பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களிடம் எந்த பொருளும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (34) என்பவரது உடமைகளை சோதனை செய்ததில் 1.5 கிலோ தங்கத்தை எலக்ட்ரானிக் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 73 லட்சம்.
இதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் (32) என்பவர் ஆசனவாயில் மறைத்து 575 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ 9.5 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் நேற்று ஒரே நாளில் திருச்சி விமானநிலையத்தில் 1.2 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments