திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், இலங்கை, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த வெவ்வேறு 3 விமானங்களில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான மூன்று ஆண் பயணிகளை சோதனை செய்ததில், அவர்கள் உடமைகளில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் மறைத்து வைத்திருந்த சுமார் 1952 கிராம் மதிப்புள்ள 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 3 பயணிகளை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 1.28 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments