Advertisement
திருச்சி மாவட்டம் முசிறி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக இருப்பவர் லதா. மணப்பாறை போலீஸ் சரகம் மற்றும் முசிறி சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்கள் இந்த மதுவிலக்கு பிரிவின் எல்லையாகும்.
Advertisement
இந்த நிலையில் இங்கு லட்சம் பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜீ தலைமையிலான போலீசார் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 1,80,850 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Comments