மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட ஏா் ஏசியா விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியிடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவா் தனது அடிவயிற்றில் 1,141 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 94.53 லட்சம் என சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடா்பாக அந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments