கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தல் செய்பவர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி உத்தரவிட்டதின்பேரில் காவல் துணை ஆணையர் தெற்கு மற்றும் வடக்கு, உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இன்று (11.09.2024)-ந்தேதி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்ஜிநகர், மில்காலனி பகுதியில் கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் அவர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல் ஆளினர்களால் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் தனுஷ் த.பெ.பூபதி, என்பவரின் வீட்டில் சுமார் ரூ.12,000/- மதிப்புள்ள 1.250 கிலோ கிராம் தமிழக அராசல் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாநகரத்தில் கஞ்சா, குட்கா புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments