மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சந்தேகத்துக்குயிடமான இரு பயணிகளை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் உடலுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மூலம் தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. இருவரும் 1188 கிராம் தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்தி வந்திருந்தனர். அவற்றின் மதிப்பு 71.72 லட்சம் ஆகும். இது தொடர்பாக சுங்கத்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments