கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு. செய்யப்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டையில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் வீடு பூட்டபட்டிருந்து.
பின்னர் வீட்டின் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி இலுப்பூர் முன்னாள் சேர்மன் ராஜமன்னார் வீடு எடமலைப்பட்டிபுதூர் அன்பு நகரில் உள்ளது அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 இடங்களிலும், அன்பு நகர், கூடுதலாக தற்போது ரைஸ் மில் உரிமையாளரான சுதாகர் வீட்டில் ரெய்டு துவங்கியுள்ளது.
இவர் வங்கி கடன் மூலம் புதிய வீடு கட்டியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நடந்து வரும் சோதனையில் தற்போது 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments