திருச்சிராப்பள்ளி மாவட்டம். நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MIET 100 அடி சாலையில் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினரும் இணைந்து R.மாணிக்கம் (58) த/பெ ராமலிங்கம், மாருதி நகர், மூன்றாவது குறுக்கு தெரு, மாத்தூர் ரவுண்டானா, திருச்சி என்பவருக்கு சொந்தமான எஸ்.ஆர் டீக்கடையில் சோதணை செய்த போது சுமார் 201 கிராம் எடையுடைய அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இன்று (29.08.2024) கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், மேற்படி நபரிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினரும் மேற்கொண்டு விசாரணை செய்த போது ரவிச்சந்திரன் 52/24 த/பெ கிருஷ்ணமூர்த்தி. G 550A. இரண்டாவது குறுக்கு தெரு, குமாரமங்கலம். புதுக்கோட்டை என்பவர் தினந்தோறும் நான்கு சக்கர வாகனத்தில் வந்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொடுத்து விட்டு செல்வதாக தெரிவித்தார்.
இந்த தகவலின் பேரில் இன்று 14:30 மணியளவில் MIET 100 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக மேற்படி ரவிச்சந்திரன் ஓட்டி வந்த TN 81 AZ 0631 என்ற பதிவெண் கொண்ட Maruti Eeco காரினை சோதனை செய்த போது காரில் சுமார் 148.780 கிலோ கிராம் குட்கா போதை பொருட்களை சட்டவிரோதமாக (மதிப்பு ரூ1,18,114/-) எடுத்து வந்தது தெரிய வந்த நிலையில், மேற்படி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments