திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நஜ்மா பேகம் (75). இவரது கணவர் மத்திய அரசு பணியில் அதிகாரியாக பணிபுரிந்து இறந்துவிட்டார். இந்நிலையில் நஜிமா பேகத்தின் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் கல்கத்தாவிலும் பணி புரிந்த வருகிறார்கள்.
மேலும் மகளுக்கு திருமணமாகி இராமலிங்க நகரில் வசித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நசீமா பேகம் மகள் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்நிலையில் வீட்டில் இரும்பு ஜன்னல் உடைத்து பெயர்க்கப்பட்டுள்ளதாக நஜிமாபேகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தில்லை நகர் போலீசாருக்கு தகவல் அளித்ததையெடுத்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, மற்றும் இந்திய பணம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments