திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெரு நடுவீதியில் வசித்து வருபவர் மணிமாறன் (39). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் நீலகிரியில் உள்ள தனதுஉறவினர் வீட்டின் விசேஷத்திற்காக நேற்று மாலை தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து சுமார் 10 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மாடியில் மணிமாறன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் வீட்டில் அவரது தங்கை மகேஸ்வரி வசித்து வரும் நிலையில் இன்று காலை மாடிக்குச் சென்ற அவரது தங்கை மகேஸ்வரி தனது அண்ணனின் வீடு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு இது பற்றி துறையூர் போலீசுக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார், மோப்பநாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டின் மாடிப்பகுதிகள் மற்றும் அருகில் உள்ள இடங்களில் சென்ற மோப்பநாய் தெருவின் முன் பகுதி வரை சென்று நின்று விட்டது.
மேலும் இப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பரபரப்பாகவே காணப்படும் இப்பகுதியில் நடைபெற்ற துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments