திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை, நைஜீரியா, வங்கதேசம், சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 பேர் உள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்ததும், வழக்கு நிறைவு பெற்ற பின்னரும் தங்களை விடுவிக்காமல் சிறப்பு முகாமில் அடைக்க வைக்கப்பட்டுள்ளதாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையெடுத்து சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் கடந்த மாதம் சந்தித்த மறுவாழ்வு திட்ட ஆணையர்கள் கொண்ட குழுவினர் வருகிற 20-ஆம் தேதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையெடுத்து, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கொண்ட படகு பழுதடைந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்தது.
அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது ஒன்றரை வருடங்களாக வழக்கு நடைபெற்று திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 7 மாதங்களாக மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்தனர். தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் விசாரணை நடைபெற்றது தற்போது 10 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் நேற்று இரவு சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் 10 மீனவர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments