திருச்சி மாவட்டம் துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கோபாலகிருஷ்ணன் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர் அமர்ந்து இரவு உணவு அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது பின்பக்க வழியாக மூன்று மர்ம நபர்கள் பட்டாக்கத்தியுடன் வந்து ஜோதிமணி மற்றும் கோபாலகிருஷ்ணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். மேலும் கவிதா அணிந்திருந்த 11 சவரன் நகையை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டாகத்தியை காட்டி நகை பறித்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
382
18 June, 2023










Comments