திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் உள்ள உணவகம் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தி இருப்பதாக டெல்லியில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் மாலிம் என்பவருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில் திருச்சி உறையூர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் உறையூர் காவல் ஆய்வாளர் சோனியா காந்தி தலைமையிலான போலீசார் பாண்டமங்கலம் உறையூர் சாலை ரோடு பகுதியில் உள்ள உணவகம் மற்றும் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சேர்ந்த 13 மற்றும் 15 வயது சிறுவர்கள், மணப்பாறை கண்ணுடையான் பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், உறையூர் பாண்டமங்கலம் சேர்ந்த 16 வயது சிறுவன் என நான்கு பேரை போலீசார் மீட்டனர்.
இதேபோல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்ட 18 வயதுக்கு குறைவான 8 குழந்தை தொழிலாளர்களை கோட்டை போலீசார் மீட்டனர். மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது குற்றத்திற்காக உணவகம் மற்றும் கடை உரிமையாளர்கள் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த செல்வராஜ், உறையூர் சாலை ரோட்டைச் சேர்ந்த ரஜினிகாந்த் மற்றும் கருப்பசாமி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கட்டுமான நிறுவன உரிமையாளர் நளினி, புரோக்கர்கள் ஆலம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments