திருச்சி எடமலைபட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் காலனியில், நேற்றிரவு 8 மணி அளவில் தெருவில் வசிக்கும் நாய்களுக்கு யாரோ சமூகவிரோதிகள் விஷம் வைத்துள்ளனர். இதில் பண்ணிரண்டிற்கும் மேற்பட்ட வாயில்லா ஜீவங்கள் உயிர் நீத்தது .
திருச்சி மாநகர பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாலும் சில இடங்களில் சிறியவர்கள் பெரியவர்களை நாய் கடித்து அதனால் பெரும் காயம் ஏற்பட்டு நாயை அடித்து கொன்ற சம்பவமும் அரங்கேறியது.. ஆனால் எடமலைபட்டி புதூர் பகுதியில் தெரு நாய்களுக்கு யாரோ திட்டமிட்டு விஷம் வைத்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஈவு இரக்கமற்ற இச்செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் மற்றும் இங்கு வாழும் மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .திருச்சி மாநகராட்சியும் காவல்துறையும் இச்செயல் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments