திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டியில் வசிப்பவர் பெரியசாமி (54). விவசாயியான இவர் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பலா மரத்தின் இருந்து மலைப்பாம்பினை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவரது தோட்டத்தில் இது இரண்டாவது முறையாக பிடிக்கப்பட்டது கடந்த 12ம் தேதி இதே போன்று ஒரு மலைபாம்பு அவரது தோட்டத்தில் தீயணைப்பு வீரர்களால் பிடிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments