திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கீழகல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தனது தந்தையார் நல்லையன் இறந்தது தொடர்பாக வாரிசு சான்றிதழ் வேண்டி மணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாணிக்கம் விண்ணப்பம் செய்திருந்தார்.
வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவரும் ரூபாய் 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறோம் என்று மாணிக்கத்திடம் கூறியுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கம் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கிறார். மாணிக்கத்தின் புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார்
இன்று மாலை வருவாய் ஆய்வாளர் முருகேசனும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இளவரசனும் மாணிக்கத்திடம் லஞ்சமாக பணம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments