தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 12ஆம் வகுப்பில் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதம் ஆகும்.
மார்ச் 2024 ல் நடைபெற்ற 2023 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 258 பள்ளிகளில் பயின்ற 13371 மாணவர்களும், 16244 மாணவிகளும் ஆக மொத்தம் 29615 மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுதினர்.12491 மாணவர்களும், 15863 மாணவிகளும் ஆக மொத்தம் 28354 மாணவ/மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 95.74 % தர வரிசை 13மாநில தேர்ச்சி சதவீதம் 94.56%
திருச்சி தேர்ச்சி சதவீதம் 95.74 இது கடந்த ஆண்டு 96.02 சதவீதமாக இருந்தது தற்போது தேர்ச்சி 0.28 சதவீதம் குறைந்து உள்ளது.
Comments