Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பண்டித ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாள் – காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா நவீன இந்தியாவின் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் பள்ளி மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், இனிப்புகள் வழங்கினார். மேலும் பள்ளி குழந்தைகள் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுவது குறித்தும், அவரைக் குறித்தும் குழந்தைகள் பேசினர் இதில் வெற்றி பெற்றவருக்கு பரிசுகளை வழக்குரைஞர் எம் சரவணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், உறையூர் விஜி, கலை பிரிவு ராஜீவ் காந்தி, மேலபுதூர் சத்தியநாதன், சமீரா பேகம், என் ஜி ஓ பிரிவு தலைவர் திருக்கண்ணன் திம்மை செந்தில் குமார் நிர்மல் குமார் கோகுல் கிருஷ்ணமூர்த்தி தாகூர்தெரு முருகன் அன்பு ஆறுமுகம் அண்ணாதுரை சம்பத் வழக்குரைஞர் பிரிவு விக்னேஷ் சிவகாமி சுகன்யா இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் ஜிம் விக்கி உறையூர் காமில் இஸ்லாம் இக்பால் இர்பான் ரகு சிந்தை ஸ்ரீராம் பிரகாஷ் பாலாஜி முகமது சலீம் மாரியப்பன் சண்முகம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும், மாநகராட்சி கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுசாமி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் தலைமையில் இந்திய ஒற்றுமை பயண நினைவு கொடிமரம் நிறுவப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் ரோஜா மலர்கள் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார், கேபிள் முரளி, பிரசாந்த், தினேஷ், ஜானகி, நிதிஷா, பிரகாஷ் உள்ளிட்ட சுமார் 15 பேர் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, பொறியாளர் பேட்டரி ராஜ்குமார், மன்சூர் அலி, கவுன்சிலர் சோபியா விமலா ராணி, இராணுவ அணி ராஜசேகரன், கோட்ட தலைவர்கள் தர்மேஷ், ஜெயங்கோபி, மலர் வெங்கடேஷ், வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல், அழகர், மணிவேல், கனகராஜ், பாலு, எட்வின் ராஜ் இஸ்மாயில், எஸ் சி அணி கலியபெருமாள், மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், ஐ டி அரிசி கடை டேவிட்,

விஜய் பட்டேல், கிளமெண்ட் , கார்த்தி, ஊடக பிரிவு செந்தில். என்.ஜி.ஓ. திருகண்ணன், மீனவர் அணி தனபால், மாணவரணி நரேன், மாவட்ட நிர்வாகிகள் வல்லபாய்படேல், கே.டி. பொன்னன், சத்யநாதன், பூக்கடை பன்னீர், ராமலிங்கம் ரெங்கநாதன் அன்பு ஆறுமுகம், மாரீஸ்வரி, கோகிலா, பெல்ட் சரவணன், நடராஜன், ஆனந்தபத்மநாதன், விமல் ராஜ் , பாண்டியன், வியாபக்தன், பாபு பாய், ஜாபர், லட்சுமி, பாப்பம்மாள், தமிழ்ச்செல்வன், மலைக்கோட்டை சேகர், பாதயாத்திரை நடராஜன், யோகநாதன், தியாகராஜன்,

கிரேட் மாரி, மார்க்கெட் தினேஷ் ஒளி முகமது அண்ணாதுரை பெரியசாமி அருள் சம்பத்,ஜாகிர் உசேன் கிஷோர் சர்புதீன் மார்ட்டின், ஜாகிர் உசைன், குமரேசன் கலியபெருமாள் லட்சுமி அம்மாள் பாப்பம்மாள் நூறு முகமது ரங்கநாதன் சிவா வைத்தியநாதன், குமரன் நம்பியார் காதர் பாட்ஷா பத்மநாபன் அப்துல் மஜீத் வீரமணி வாசுகி, புனிதா கேப்டன் பாபு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *