திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானதால் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பின் வாயில் கதவை சாத்தி அவர்களிடம் சாவியை கொடுத்து உள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்பிருக்கு பார்வையாளர்களும் அல்லது அவர்களின் உறவினர்கள் யாரும் உள்ளே வராத அளவுக்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments