திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 8வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவர்கள் இருவர் பைக் ஓட்டிச்சென்றனர். ரங்கா நகர் 7 வது கிராஸ் பகுதியில் சென்றபோது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பைக், பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் தலையில் காயம்டைந்த இருவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது வழியிலேயே சிறுவர்களில் ஒருவன் இறந்தார். மற்றொரு சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 வயது பூர்த்தியாகாமல் பைக் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், திருச்சி மாநகரில் பல இடங்களில் பள்ளி சீருடையில் வாகன உரிமம்பெறாத சிறுவர்கள் பைக்கில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
அவ்வப்போது போலீசார் அவர்களை பிடித்து வைத்து பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தாலும், சிறுவர்கள் பைக்கில் பள்ளிக்கு செல்லுவதும்,விடுமுறை நாட்களில் சுற்றி திரிவதும் தொடர் கொண்டே இருக்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments