மத்திய அரசின் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல், ஊழல் ஆகியவற்றை கண்டித்து சிபிஎம் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இதை அடுத்து இன்று காலை திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திருவெறும்பூர் சிபிஎம் கட்சி தாலுகா செயலாளர் ஏ மல்லிகா தலைமையில் கூட்டமாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழுவை சேர்ந்த கே.சிவராஜ், நிர்வாகிகள் எஸ்.சம்பத், எம்.முருகேசன், எஸ்.தெய்வநீதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் நூற்றுக்கணக்கான கட்சியினருடன் கோசமிட்டு ஊர்வலமாக திருவெறும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர். ரயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களை மீறி கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயற்சித்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். இதில் ஆண், பெண் உள்பட 140 பேர் கைதாகி உள்ளனர். இதனால் திருவெறும்பூர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Comments