Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 15 பதில் 9 – கருப்புக் கொடி போராட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது வேலாயுதம்குடி. இந்த பகுதியில் சுமார் 50 முதல் 60 குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த நிலையில் கும்ப குடியிலிருந்து மாத்தூருக்கு செல்லும் காலையிலிருந்து வேலாயுதங்குடிக்கு பிரிந்து செல்லும் சாலை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும்.

இந்த சாலை ஆரம்ப காலகட்டத்தில் 15 அடி அகலம் இருந்ததாகவும், அதன் பிறகு 13 அடி ஆனதாகவும், தற்பொழுது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு சுமார் 3.5 (மூணரை) மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் சாலை போடுவதற்கு 13 லட்சத்து 64 ஆயிரத்து 700 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 10 அடிக்கு குறைவான அகலத்தில் பேவர் பிளாக் சாலை போடுவதற்காக சாலை கொத்தப்பட்டு கட்டைகள் கட்டப்பட்டுள்ளது. இப்படி வேலாயுதம்குடியில் சாலையின் அளவு அகலம் குறைவாக போடப்படும் சாலையால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து திரும்பி செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். 

மேலும் அப்படி 4 சக்கர வாகனங்கள் வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கூட ஒதுங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்த சாலை ஏற்கனவே 15 அடியில் இருந்தது 13 அடியாக மாறியது தற்பொழுது அதுவும் 10 அடிக்கு கீழ் குறைந்துள்ளது.

கழுதை சேர்ந்து கட்டெறும்பு ஆன கதையானது போல் உள்ளது. எனவே 13 அடி அகலத்திற்காக தார் சாலை அல்லது சிமெண்ட் சாலை அல்லது பேவர் பிளாக் சாலையோ போட வேண்டும். அப்படி போடவில்லை என்றால் சாலையை போட வேண்டாம் என்று வேலாயுதங்குடி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இதுகுறித்து கும்பக்குடி ஊராட்சி செயலாளர் கந்தசாமி இடம் கேட்டபோது…. வேலாயுதம் குடியில் போடப்படும் சாலை 100 நாள் வேலை திட்டத்தில் கீழ் போடப்படுகிறது. இது 300 மீட்டர் நீளமும் 3 1/2 மீட்டர் அகலமும் கொண்டது என்றும், இதன் மதிப்பு 13 லட்சத்து 64 ஆயிரத்து 700 என்றும், அகலம் குறைவாக போடப்படுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி கேட்டதற்கு தனக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் நாளை போய் பார்ப்பதாக கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *