தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சிமுகாம் வருகின்ற (29.04.2024) முதல் (13.05.2024) முடிய 15 நாட்களுக்கு திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 06:30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 04:30 மணி முதல் 06:30 மணி வரையிலும் தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, ஊசூ (Martial Arts) ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
எனவே, மேற்கண்ட பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தினமும் ஊட்டச்சத்து வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுபவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.200/- ஆகும். முன்பதிவுகள் (27.04.2024) முதல் அண்ணா விளையாட்டரங்க அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும் (0431-2420685) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments