திருச்சி மாவட்டம் துறையூர் புலிவலம் அருகே உள்ள கரட்டாம்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி. இவர்அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த நிலையில் சிறுமி தன்னுடைய மீனாட்சிபுரத்தில் உள்ள சித்தி வீட்டில் தங்கிருந்தார். அப்போது எதிர்வீட்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் மகளுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் சிறுமியிடம் ஆட்டோ டிரைவர் விஜயகுமார் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பழகி வந்துள்ளார்.
இதுப்பற்றி சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே ஆட்டோ ஓட்டுநரை கண்டித்துள்ளார். ஆனால் புதிய செல்போனை சிறுமிக்கு வாங்கி கொடுத்து விஜயகுமார் மீண்டும் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசைகூறி கட்டாயபடுத்தி உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து சில நாட்கள் கழித்து சிறுமி ஆட்டோ ஓட்டுநரிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார் குடிபோதையில் சிறுமியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை செய்து ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் தலைமறைவான விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments