திருச்சி மாவட்டத்தில் உள்ள 349 சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் உள்ளனர். அதில் பல்வேறு வழக்குகளில் 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று போலீசார் 166 ரௌடிகளின் வீடுகள் மற்றும் 3 ரௌடிகளின் கூட்டாளிகளது வீடுகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதில் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த ரௌடி விக்னேஷ், தீனதயாளன், அவரது கூட்டாளி மணிகண்டன் (எ) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments