திருச்சிதிருவெறும்பூரில்புதிய தமிழகம் கட்சியினர் மதுபான பாட்டில் உடைக்கும் போராட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டுமென புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருவெறும்பூர் பகுதியில் உள்ள கக்கன் காலனி மற்றும் தொண்டமான் பட்டி ஆகிய இரண்டு அரசு மதுபான கடைகள் முன்பு அரசு மதுபான பாட்டில்களை உடைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி போலீசார் சம்பந்தப்பட்ட கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமையில் 17 பேர் தொண்டமான் பட்டியில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அரசு மதுபான பாட்டில்களை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட வந்த பொழுது பத்தாளப் பேட்டை அருகே அவர்களை மடக்கி திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments