திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த விசுவநாதன் (35) என்ற பயணி 17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் கான் (37) என்பவர் கீழக்கரை போலீசாரால் பல்வேறு வழக்கு தொடர்பாக தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் முகமது ரியாஸ் கான் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் வந்து அவரை கைது செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments