திருச்சி வயலூர் ரோடு குமரன் நகர் 18வது தெருவில் வசித்து வருபவர் தியாகராஜன் (70). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனையடுத்து மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 19 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் சென்றுள்ளனர். சென்னையில் திருச்சிக்கு வந்த தியாகராஜன் வீட்டை பார்த்தப்பொழுது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, நகை மற்றும் பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தியாகராஜன் வீட்டில் நகை, பணத்தை திருடிய நபர்களை கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments