திருச்சி பள்ளக்காடு தோகைமலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் ஆகாஷ் என்கிற செல்லாமாரி (19). இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த அகிலா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சோமரசம்பேட்டை தாயனூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் ஆகாஷ் சடலமாக கிடந்துள்ளார்.
அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து போலீசார் இறந்து கிடந்த ஆகாஷ் உடலில் நெற்றி, கழுத்து, உச்சந்தலையில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாலிபர் உயிரிழந்து கிடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 19 வயதில் காதல் செய்து 6 மாதம் ஆன நிலையில் ஆகாஷ் கொலை செய்யப்பட்டடுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்றிரவே கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு நண்பர்கள் நான்கு பேருடன் மது அருந்தியுள்ளனர். மேலும் ஆகாஷ்க்கு கஞ்சா போதை பழக்கமும் இருந்துள்ளது. கஞ்சா போதை தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்து உள்ளனர். நான்கு நண்பர்களும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை சோமரசம்பேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments