தளர்வுகள்ள ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. எனவே நேற்று முன்தினம் கடைவீதிகளில் குவிந்த மக்கள் ஒருவாரத்துக்கு தேவையான பொருட்களை அள்ளிச் சென்றனர். இரவு 9 மணி வரை இயங்கும் என்று அறிவிப்பு பலகை வைத்திருந்த பல மளிகைக் கடைகள், பேக்கரிகள், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் முழுவதும் விற்று தீர்ந்தன.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக காந்தி மார்க்கெட் முழுவதும் மூடப்பட்டு தற்காலிக மார்கெட்டாக மேலப்புலிவார்டு, மரக்கடை பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இதில் மொத்த கமிஷன் மண்டி காய்கறி வியாபாரிகள் 400 பேர் உள்ளனர். இவர்கள் மூலம் மட்டும் ரூபாய் 40 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளது. அடுத்ததாக 700 காய்கறி வியாபாரிகள் உள்ளனர். இவர்களிடம் 3.5 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. மொத்தம் பழ வியாபாரிகள் 20 பேர் உள்ளனர் இவர்கள் மட்டும் 40 கோடி வரை சரக்குகள் பரிவர்த்தனை செய்துள்ளனர். பெரிய சில்லறை வியாபாரிகள் 30 பேர் உள்ளனர் இவர்கள் 10 கோடி வரை விற்பனை செய்துள்ளனர். இதுதவிர மளிகை அரிசி உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பொருட்கள் மட்டும் 100 கோடி ரூபாய் வரை விற்பனையாகி உள்ளது.
இந்த வகையில் நேற்று முன் தினம் காலை முதல் இரவு வரை மட்டும் காந்தி மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 73 கோடி வர்த்தகம் நடந்துள்ளது. ஒரே நாளில் இதுவரை பண்டிகை காலத்தில் கூட இந்த இலக்கை எட்டியது இல்லை வழக்கமாக 40 கோடி வரை மட்டுமே நடக்கும் பரிவர்த்தனை நேற்று ஒரே நாளில் நான்கு மடங்கு அதிகமாக ரூபாய் 193 கோடி வரை நடந்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments