திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகனுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வடக்கு காட்டூர் அன்னதாசன் தெருவை சேர்ந்த ராமன் மகன் ரமேஷ் (36), வடக்கு காட்டூர் கருணாநிதி தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் ஸ்ரீபன் ராஜ் (22) ஆகிய இரண்டு பேரும் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தபோது அவர்களை கையும் களவுமாக சந்திரமோகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments