சென்னையில் இருந்து திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தது. இந்த ரயிலில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத் நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணியின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் 17 லட்சம் ரொக்க பணம் இருந்தது. இதனை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இந்த ரயில் பயணிடம் விசாரணை மேற்கொண்டதில் மதுரையை சேர்ந்த லட்சுமணன் (26) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் அழைத்து, தற்போது தங்கம் மற்றும் பணத்தை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பர்மிந்தால் செய்யப்பட்டுள்ள நகை, பணம் யாருடையது? எங்கிருந்து எங்கே கொண்டு செல்லப்படுகிறது? இதற்கு முறையான ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments