திருச்சி முக்கொம்பில் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் குளிக்க சென்றனர். அப்பொழுது காவிரி ஆற்றில் மூழ்கியுள்ளனர். தீயணைப்புத்துறையினர் காவல் துறையினர் அவர்கள் குறித்த விவரங்களை கேட்டு வருகின்றனர்.
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நீரில் மூழ்கிய இரண்டு மாணவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். காவேரி தற்போது பத்தாயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆடிப்பெருக்கு முன்னிட்டு யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது என உத்தரவவிட்டு இருந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் முக்கொம்பு விற்கு சுற்றுலா வந்து அங்கே குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கியுள்ளதாக தற்பொழுது முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments