திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மருதூர் கிராமத்தில் 2 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று உணவைத் தேடி வழி தவறி கிராமத்துக்குள் புகுந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இரண்டு வயதுடைய ஆண் புள்ளிமானை பத்திரமாக உயிருடன் பிடித்தனர்.
பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் வந்த திருச்சி வனச்சரகர் புள்ளம்பாடி பிரிவு வனவர் ஞானசம்பந்தம் அவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் மருதூர் கிராமத்திற்கு வந்த வனவர் ஞானசம்பந்தம் 2 வயது புள்ளிமானை பத்திரமாக மீட்டு தச்சங்குறிச்சி வனப்பகுதியில் விட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments