திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்டலைப்புத்தூர் பகுதியில் முசிறி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நேற்று முன்தினம் (07.11.2023)-ஆம் தேதி மாலை ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தவர்களை சோதனை மேற்கொண்ட போது அவர்களிடம் சாக்கு பையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது.
மேற்படி நபர்களை தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேலும் 3 நபர்கள் TN48-BE-8498 Bolero வாகனத்தில் மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் வேளக்காநத்தம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் முசிறி மற்றும் குழுவினர் விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த வாகனம் மற்றும் 3 நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து சுமார் 200 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அவர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்திய Bolero கார்-1 மற்றும் இருசக்கரவாகனம்-2 ஆகியவை கைப்பற்றபட்டது.
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளையும் கைது செய்து முசிறி காவல் நிலைய குற்ற எண். 444/23 u/s 273,328, IPC & 24(1) of COTPA Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments