சித்திரை முதல் நாளான சோபகிருது ஆண்டு தொடக்கமான வருடப்பிறப்பை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து உலகத்தில் வன்முறைகள் கலைந்து ஒருமித்த சமாதானம் ஏற்படவும், பருவத்தில் முறையாக மழை பெய்திடவும், சிவாச்சாரியார் ஞானம் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க 2000 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

சிவசாரியார் மந்திரங்கள் ஓத, அதனைத் தொடர்ந்து பெண்களும் மந்திரங்களை தொடர்ந்து கூறினர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்களுக்கு ஆலயம் சார்பில் விளக்கிற்கு எண்ணெய், திரி, அபிஷேகம் செய்யும் குங்குமம், தேங்காய், பூ, பழம், பத்தி, மந்திரங்கள் அச்சிட்ட புத்தகம் மற்றும் ஒரு சில்வர் பாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ்.வீரமணி, சின்ன நாட்டாமை என்.மோகன நாகராஜன் மற்றும் இந்து சமய அறநிலயத்துறை செயல் அலுவலர் அழ.வைரவன் ஆகியோர் முன்னின்று தொடக்கி வைக்க வழிபாடு நடைபெற்றது.

13 Jun, 2025
388
15 April, 2023










Comments