Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

2024 தேர்தல் திமுக இல்லாத நிலைக்கான அடித்தளத்தை உருவாக்கும்- அண்ணாமலை பேச்சு

இந்திய ஜனநாயக கட்சி சார்பில், திருச்சியில் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசுவையில்…. நாட்டில் உள்ள 543 எம்.பி.,க்களுக்கும் மதிப்பெண் கொடுத்து, அதன் அடிப்படையில் மதிப்பீடு செய்தால், பாரிவேந்தர் முதன்மையானவராக இருப்பார். கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, பதினேழு அரை கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி கொடுத்தது. ஆனால், பெரம்பலுார் தொகுதி எம்.பி.,யாக இருந்த பாரிவேந்தர், அதை விட 15 மடங்கு, 126 கோடி ரூபாய் தொகுதி மக்களுக்காக செலவு செய்துள்ளார். நல்ல மனிதர்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், பாரிவேந்தரை மீண்டும் கொண்டு வர வேண்டும். பாரிவேந்தர் மீண்டும் எம்.பி.,யாக வருவார், என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ராஜராஜ சோழன் போல், பார்லிமெண்ட்டில் செங்கோலை சாட்சியாக வைத்து, பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழி மூத்த மொழியாக இருந்தாலும், நாட்டில் உள்ளவர்கள் அதன் கலாச்சாரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. அந்த கூட்டில் இருந்து விடுவித்து, உலகம் முழுவதும் படம் பிடித்துக் காட்டுவதற்கு, மோடி தேவைப்பட்டிருக்கிறார். மூன்றாவது முறையாக, மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியில் அமரப் போகிறார். அதன் பின், 2026ல், தமிழகத்தில், திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி வரும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் செய்ததாக, ஒரு சாதனையை கூட சொல்லாமல், அண்ணாத்துரை வீசிய பிஞ்சு போன எடுத்து வைத்துக் கொண்டு, வடக்கு, தெற்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இன்றைக்கு ஸ்டாலின், அறிவாலயம் முழுவதும் சுத்தி, அதே பிஞ்சுப் போன செருப்பு எடுத்து போட்டுகொண்டு, 2024ம் ஆண்டு அரசியல் பேசுவதற்கு வந்திருக்கின்றார்கள். மறுபடியும் வடக்கு தெற்கு பேசுவது என்னவாகும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அது, 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு மிகத் தெளிவாக தெரிய போகிறது. இந்த பிஞ்சுப் போன, வேலைக்கு ஆகாது, வேண்டாம் என்று வீசி எறியப்பட்ட செருப்பை மறுபடியும் திமுக அணிந்து, 2024ம் ஆண்டு தேர்தல் களத்திற்கு வரும்பொழுது திமுக என்கிற கட்சி இல்லாமல் போவதற்கு அடித்தளம் இடக்கூடிய தேர்தல் ஆக 2024ம் ஆண்டு தேர்தல் இருக்கும்.

தமிழகத்துக்கு, இரண்டு சைனிக் பள்ளிகள் வரபோவதாக அறிவிப்பு வெளியானதும், பெரம்பலுாருக்கு, உலகத் தரம் வாய்ந்த சைனிக் பள்ளியை கொண்டு வர வேண்டும், என்று பிரதமருக்கு கடிதம் எழுதியவர் பாரிவேந்தர். ஓட்டளித்த மக்களுக்காக, 24 மணி நேரமும் உழைக்க வேண்டும் என்ற குறிகோளோடு பணி செய்தவர் பாரிவேந்தர் ஒருவர் தான். அதனால், 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அவரது வெற்றி, பெரம்பலுார் தொகுதியில் உறுதி செய்யப்பட்டு விட்டது. வரும் தேர்தலில், 400 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் போது, பாரிவேந்தர் வாயிலாக பெரம்பலுார் தொகுதி மக்கள், முழுமையான பலனை பெறப்போகிறீர்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3ho

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *