திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல் துறையினர் கடந்த 2019 முதல் 2021 வரையிலான பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதை பொருளினை அடிக்கும் பொருட்டு மண்டல அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவிற்கு தலைவராக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணா சுந்தர், அக்குழுவின் உறுப்பினர்களாக திருவாரூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர், திருச்சி மாநகர வடக்கு காவல்துறை ஆணையர், திருச்சி மாவட்டம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ( CWC),
திருச்சி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இணை இயக்குனர் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியோர் முன்னிலையில் இன்று (28.06.2022) தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராமம் அயோத்தி ரோடு Medicare Enviro Systems என்ற இடத்தில் 2082 கிலோ 340 கிராம் மதிப்புள்ள கஞ்சாவை தீயிட்டு கொளுத்தி அழிப்பு செய்யப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments