Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்புப் பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. (25.10.2024) முதல் 21வது கால்நடை கணக்கெடுப்பு நாடுமுழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குள் இந்தப்பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் (30.10.2024) முதல் தொடங்கப்படுகிறது. இந்தப் பணியினை மேற்கொள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 264 எண்ணிக்கை கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 52 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முகப் பயிற்சி மற்றும் களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் கிராம வாரியாகவும், நகரப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் 16 வகையான கால்நடைகளின் எண்ணிக்கை, இளம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். கால்நடைகளின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கு எடுத்தால்தான் கால்நடை பராமரிப்பதற்கான எதிர்காலத்தில் திட்டங்களை திட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவை சிறப்பாக செய்ய இயலும்.

கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனம், கால்நடை நோய் தடுப்பூசி, கால்நடை மருந்துகள் உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க கால்நடைகள் எண்ணிக்கை முக்கியம் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்களான பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், வெண்ணை. நெய். ஆட்டு இறைச்சி, பிற இறைச்சி, முட்டை போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்பு மிக மிக முக்கியமானதாகும்.

கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலங்கு வழி தொற்று நோய்களான ரேபீஸ் எனப்படும் வெறி நோய், புருசெல்லா எனப்படும் கருச்சிதைவு நோய், எலிக் காய்ச்சல் எனப்படும் மஞ்சள் காமாலை போன்ற 100க்கும் மேற்பட்ட நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கால்நடைகள் எண்ணிக்கை அவசியமானது.

கடும் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் கால்நடைகள் பாதிக்காமல் தடுக்கவும். கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய உரிய நிவாரணம் அளிக்கவும், கால்நடை கணக்கெடுப்பு ப்பு மிக முக்கியமாகும். கால்நடைகளுக்கான கொட்டகை வசதி, கால்நடை காப்பீடு வசதி, கால்நடை தீவன உற்பத்தி போன்றவற்றை திட்டமிட கால்நடை எண்ணிக்கை இன்றியமையாதது.

கால்நடை கணக்கெடுப்பின் வழிமுறைகள் அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் இக்கணக்கெடுப்பு நடை பெறும். காலநடை உள்ள மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் பண்ணைகள், வழிப்பாட்டுதலங்கள், விலங்கு நலமையங்களில் உள்ள மற்றும் பசுமடங்களில் உள்ள கால்நடை விவரங்கள் சேகரிக்கப்படும்.

கால்நடை வைத்துள்ளவரின் பெயர், முகவரி, ஆதார், தொலைபேசி எண். முக்கிய தொழில், அவரிடம் உள்ள நிலத்தின் அளவு, அவரிடம் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

எனவே கால்நடை கணக்கெடுப்பாளர்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, உரிய விவரங்களை அளித்து கால்நடை கணக்கெடுப்புப் பணி துல்லியமாக நடை பெறவும், எதிர்காலத்தில் கால்நடைகள் வளம் மற்றும் நலத்துடன் மனிதர்களுக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் திட்டமிடவும் நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் தேவையான தரவுகளை அளித்திடுமாறு திருச்சிராப்பள்ளி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *