திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோம்பை பகுதியில் பெரம்பலூரை சேர்ந்த சாமியார் ஒருவர் ஆசிரமம் அமைத்து பூஜைகள் செய்து வந்தார். இந்நிலையில் அவர் அரசுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து செய்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரமத்திற்கு நாமக்கல் மாவட்ட வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
அப்போது ஆசிரமத்தில் உள்ள பொருட்களை ஆசிரம நிர்வாகிகள் எடுத்துச்சென்று பாதர் பேட்டையில் உள்ள விவசாயி வெங்கடேசன் என்பவர் வீட்டில் வைத்துள்ளனர். விவசாயிடம் ஆசிரமத்தில் உள்ள பூஜை பொருட்கள் எனவும் விபூதி அரைக்கும் மிஷின் எனவும் கூறி மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக மூட்டைகளை பார்த்தபோது அவற்றில் சந்தன கட்டைகள் இருப்பது தெரிந்து துறையூர் வனத்துறை அதிகாரி பொன்னுசாமி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று 22 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து விவசாயி வெங்கடேசன் மற்றும் ஆசிரமம் மேலாளர் மணிகண்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகள் சேலத்தில் உள்ள அரசு குடோனில் ஒப்படைக்கப்படும்
சந்தனக்கட்டையை மறைத்து வைத்ததற்காக மாவட்ட வனத்துறை அதிகாரி கிரண் என்பவரின் உத்தரவின்பேரில் விவசாயி வெங்கடேசன் மற்றும் ஆசிரமம் மேலாளர் மணிகண்டன் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments