திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு முகம்மதியா புரத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி (50) இவர் ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்றவர்.குடும்பத்துடன் திருச்சிக்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்று இருந்த நிலையில் வீட்டின் அருகில் வசிக்கும் உறவினர் இன்று காலையில் பார்த்த போது சுப்பிரமணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர் , இவர் வந்து பார்த்த பொழுது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 25 சவரன் நகை, 24 பட்டுப்புடவை, 2 லட்சம் பணமும் கொள்ளையடிக்கபட்டுள்ளது.
மேலும் இவர் வீட்டில் இருந்த இரட்டை குழல் துப்பாக்கியின் 10 தோட்டக்களும் கொள்ளை போனது என தெரிய வந்ததையடுத்து வளநாடு காவல் துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 2015-ம் ஆண்டு இவரின் வீட்டில் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments