Advertisement
ரயில்வே சிறப்பு காவல்படையினர் பயிற்சி பெற்ற 295 காவலர்கள் வழியனுப்பு விழா இன்று காலை ரயில்வே சிறப்பு காவல் படை மைதானத்தில் நடைபெற்றது.
Advertisement
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஐ.ஜி பிரேந்தரகுமார் கலந்துகொண்டார். மேலும் இந்த பயிற்சி முகாமில் அஸ்ஸாம், பீகார், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்
இந்த முகாமில் 295 சிறப்பு காவல் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதன்மை பயிற்சியாளர் அருணாச்சலம் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழியனுப்பு விழாவில் அதிகாரிகளின் குடும்பத்தார்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பயிற்சிபெற்ற காவல் படையினருக்கு பயிற்சி சான்றிதழ்களை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வழங்கினார்.
Advertisement
Comments