திருச்சியில் உள்ள பிரபல பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாக மரபு நபர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் காலையிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை செய்துவழங்கினார்.
குறிப்பாக திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து திருச்சி மாநகர காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.கே.நகர் உதவி ஆணையர் விஜயகுமார் அங்கு பணியாற்றும் பணியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் ஏதேனும் புதியதாக தென்படும் பொருட்களை
நீங்கள் ஆராயாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு வருபவர்களை தீர விசாரித்து வண்டி பதிவு என்னை பதிவு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments