திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அந்த பெண் முதல் கணவரை விட்டு இரண்டாவதாக காட்டுரை சேர்ந்த ஜோதி (எ ) ராஜா முகமது (48) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ராஜா முகமது காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்துவருகிறான். இந்த நிலையில் ராஜ் முஹம்மது, அந்த பெண்ணின் மகளிடம் பாலியல் சீண்டலில் இரவு நேரத்தில் உறங்கும் பொழுது ஈடுபட்டதை தனது செல்போனில் படம் எடுத்து வைத்துள்ளார். இதனை தெரிந்த அந்த பெண் ராஜா முகமது விடம் என்னவென்று கேட்ட பொழுது உடனடியாக செல்போனை உள்ள வீடியோவை அவரது மகளுக்கு அனுப்பி வைத்து தனது செல்போனில் இருந்ததை ராஜா முகமது அழித்துள்ளான்.
பின்னர் மகளின் செல்போனில் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன அந்த பெண் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜா முகமதுவை கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments