தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அய்யம்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் 17 வயதான கல்லூரி மாணவன். இவர் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை சமயபுரம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திருச்சி எடமலைப்பட்டி புதூர் சொக்கலிங்கம் புரத்தைச் சேர்ந்த 21 வயதான ரத்தினவேல் (21), இந்திரா நகரைச் சேர்ந்த சஞ்சய் (21) மற்றும் ராமச்சந்திரன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (20) ஆகிய மூன்று பேர் கத்தி முனையில் மிரட்டி கல்லூரி மாணவரிடம் இருந்த ரூ. 250 பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் கல்லூரி மாணவனிடம் வழிப்பறி செய்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ரூ. 250 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments