திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம்
முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், கண்டுபிடிக்க முடியாத வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு
வழக்குகளை துரிதமாக கண்டுபிடித்திடவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 30.04.22-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஜாமலை, லூர்துசாமிபிள்ளை காலனி அருகில் பயன்படுத்தபட்ட கார் விற்பனை முகவர் ஒருவர் தனது வேலை முடித்துக்கொண்டு, பையில் ரூபாய் 2 இலட்சம் பணத்துடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3
நபர்கள் வழிமறித்து ரூ.2 இலட்சம் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரை பெற்று, கே.கே நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர புலன்விசாரணை செய்யப்பட்டடது.
மேற்கண்ட வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, புலன்விசாரணையில் சந்தேகநபர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின்
விபரங்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
விசாரணையில் 6 திருட்டு வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட பழைய குற்றவாளியான ஜோஸ்வா
(எ) ராஜேஷ்குமார், ஆதம் மற்றும் புளுக்கு (எ) பிரசாத் ஆகிய மூன்று நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதை
ஒப்புக்கொண்டார்கள். எனவே மூன்று எதிரிகளும் கைது செய்யப்பட்டு, வழக்கு சொத்தான பணம் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு, வழக்கின் எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் உதவி ஆணையர் கே.கே.நகர் சரகம் மற்றும் கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments