திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பல்வேறு காலகட்டங்களில் நிலம் கையகம் செய்யப்பட்டு வீடற்ற ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனை ஒப்படை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கிணங்க, திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக இதுவரை 6919 பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள, ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் காலியாக உள்ள மனைகளில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஏதுவாக எதிர்வரும் (05.11.2024), (06.11.2024) மற்றும் (07.11.2024) ஆகிய தேதிகளில் அனைத்து கிராம நிருவாக அலுவலகங்களிலும் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு முகாமில் வீடற்ற, ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-ற்கும் குறைவாக உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதிச்சான்றிதல் மற்றும் வருமானச்சான்றிதல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பம் செய்து பயனையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments