Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

“ஸ்மார்ட் மீட்டர் மற்றும் SCADA சிஸ்டம் அமலாக்கம்” குறித்த 3 நாள் பயிற்சி

இந்திய அரசின் மின் துறை அமைச்சகம், மறுசீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தை (RDSS) செயல்படுத்தி மின் விநியோக நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த, மின் விநியோக நிறுவனங்களுக்கு இலக்கு சார்ந்த நிதி உதவியை வழங்குவதன் மூலம், முன் தகுதி பெற தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்து குறைந்தபட்ச அளவுகோல்களை அடைவதன் அடிப்படையில் விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் 2024-25க்குள் AT&C இழப்புகளை 12-15% என்ற அளவில் இந்திய அளவில் குறைப்பதும் ACS -ARR இடைவெளியை 2024-25க்குள் பூஜ்ஜியமாகக் குறைப்பதும் தரம், நம்பகத்தன்மை மற்றும் விலைமலிவுத்தன்மையை மேம்படுத்துவதும் ஆகும். இதன் மூலம் நிதி ரீதியாக நிலையான மற்றும் தரமான மின்சாரத்தை விநியோகத் துறையின் மூலம் நுகர்வோருக்கு வழங்கலாம்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மறுசீரமைக்கப்பட்ட விநியோகத் துறைத்திட்டத்தின் (RDSS) கீழ் மாநில அரசு மின் விநியோக நிறுவன அலுவலர்களுக்கு “ஸ்மார்ட் மீட்டர் மற்றும் SCADA சிஸ்டம் அமலாக்கம்” குறித்த பயிற்சித் திட்டங்களை தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெய்வேலியில் அமைந்துள்ள தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் தமிழ் நாடு TANGEDCO-இன் பொறியாளர்களுக்காக 2022 ஆகஸ்ட் 4ஆம் தேதி மறுசீரமைக்கப்பட் விநியோகத் துறை திட்டத்தின் (RDSS) கீழ் AMI அறிமுகம் மற்றும் AT&C இழப்புகளைக் குறைப்பதில் AMI இன் பங்கு என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சித் திட்டத்தைத் திருச்சியில் தொடங்கியது.

இந்த பயிற்சி 2022 ஆகஸ்ட் 4 முதல் 6 வரை நடத்தப்படுகிறது. TANGEDCO – வின் 40 பொறியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். கே.முத்துக்குமார். துணை இயக்குநர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் / RDSS, NPTI, நெய்வேலி வரவேற்புரையாற்றி நிகழ்ச்சி பற்றி விளக்கினார். தஎஸ்.செடியழகன், தலைமைப்பொறியாளர், பகிர்மானம் திருச்சி மண்டலம் தலைமை உரையாற்றினார்.

டாக்டர்.எஸ்.செல்வம், இயக்குநர், நிறுவனத் தலைவர். NPTI நெய்வேலி, சி.விசாலாட்சி, துணைப்பொதுமேலாளர், மின் வாரிய மனித வள மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மதுரை, எஸ்.பிரகாசம், மேற்பார்வைபொறியாளர், திருச்சி பெருநகர் மின்பகிர்மான வட்டம் மற்றும் பி.பாஸ்கர், பொதுமேலாளர், மின் வாரிய மனித வள மேம்பாடு, சென்னை ஆகியோர் தொடக்க விழாவின் போது சிறப்புரை ஆற்றினார்கள்.

 நெய்வேலி NPTL நிறுவனத்தை சார்ந்த மோ.ரமேஸ், தனிச் செயலாளர் நன்றி கூறினார்

திருச்சி மின் வாரிய மனித மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தை சார்ந்த வள்ள எஸ்.கவிதா முதுநிலைமேலாளர், கே.ஆண்டனி செல்வராஜா, உதவிப்பொறியாளர் மற்றும் அவர்களது குழுவினர் இந்த பயிற்சித்திட்டத்தை நடத்துவதற்குத் தங்களின் முழு ஆதரவையும் வழங்கினர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *